வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு
வாலிபரிடம் செல்போன், பணம் பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 39). சம்பவத்தன்று நள்ளிரவு ஜெய்ஹிந்த்புரம் தேவர் பாலத்திற்கு கீழே நடந்து சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஜெயக்குமாரிடம் இருந்த செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.