கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் உன்னியூர்கோணம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் பிரவீன் (வயது 25), சசி என்பவரின் மகன் சரத் (25). இவர்கள் நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கு தொடர்பாக மூன்றடைப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்ந்து கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பரிந்துரை செய்தார். கலெக்டர் கார்த்திகேயன் இந்த பரிந்துரையை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை நாங்குநேரி வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதாம்அலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று சமர்ப்பித்தார்.