குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி தாராபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி தாராபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம்,
குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி தாராபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம்
குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சங்கராண்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது தாளக்கரை. இப்பகுதியில் 2ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு இரண்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ெதாட்டியில் இருந்து குழாய் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தாளக்கரைக்கு வரும் அமராவதி ஆற்றில் இருந்து வரும் பிரதான குடிநீர் குழாய்க்கு மேலே தனியார் நிலத்திற்கு கொண்டு செல்வதற்காக மற்றொரு குழாய் அமைக்கப்பட்டது. இதனால் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வினியோகம் மேற்கொள்ள வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிஹரன், மண்டல துணை தாசில்தார் வளரமதி, வடுகபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ், ஊதியூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரம், பூமிபாலன்ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தாளக்கரைக்கு வரும் குடிநீர் குழாயை சேதப்படுத்தாமல் அருகில் மற்ெறாரு குழாய் அமைத்து விவசாய நிலத்திற்கு தனியாக தண்ணீர்கொண்டு செல்வது எனவும், பழுதடைந்து தாளக்கரைக்கு செல்லும் குழாயை செய்து உடனடியாக சரி செய்து குடிநீர் வினியோகம்செயவது என முடிவு செய்யப்பட்டது..
இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தாளக்கரை பகுதியில் 2 மணிநேரம் நீடித்த சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.