மேலூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநில சிறுமி மீட்பு
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநில சிறுமி மீட்கப்பட்டார்.;
மேலூர்:
தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் சுமார் 12 வயது மதிக்கத்தக்க வடமாநில சிறுமி ஒருவர் சுற்றிக் கொண்டு இருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டு விசாரித்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமி, தனது தந்தை திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேறி ரெயில் மூலம் தூத்துக்குடி வந்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுமி தூத்துக்குடி ரெயில்வே குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அன்பரசிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து சிறுமியை, அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.