ரூ.36.74 லட்சத்தில் சாலைப்பணிகள்
கோவில்பட்டியில் ரூ.36.74 லட்சத்தில் சாலைப்பணிகள் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்;
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் மன்னார்சாமி நகர் 1, 2, 4-வது தெருக்களில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36.74 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பணிகளை நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.