சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படுமா?

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பாா்த்து உள்ளனர்.;

Update: 2023-05-08 20:23 GMT

மெலட்டூர்;

தஞ்சாவூர்- விக்கிரவாண்டி சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பாா்த்து உள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு மேலாக...

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, பகுதியில் உதாரமங்களம் முதல் மேலசெம்மங்குடி வரையில் தஞ்சை- விக்ரவாண்டி நான்கு வழி நெடுஞ்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.புதியதாக அமைத்து வரும் தஞ்சை விக்ரவாண்டி 4 வழி நெடுஞ்சாலையில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, சுள்ளான் ஆறு உள்ளிட்ட 62 இடங்களில் ஆற்றுப்பாலங்களும், மேலசெம்மங்குடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், அகரமாங்குடி. அன்னப்பன்பேட்டை, தாராசுரம் உள்ளிட்ட 20 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தாமதம்

தஞ்சையில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலைப்பணிகள் முடிவுற்ற நிலையில் அன்னப்பன்பேட்டை முதல் தாராசுரம் வரையிலான நெடுஞ்சாலையில் பாபநாசம் அருகே உள்ள மேல செம்மங்குடி, பொன்மான் மேய்ந்த நல்லூர், சூலமங்கலம், பொரக்குடி, வடக்குமாங்குடி, வையச்சேரி, அகரமாங்குடி, உள்ளிட்ட இடங்களில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தாமதமாகி வருகிறது.மேலும் தஞ்சை விக்ரவாண்டி தேசியநெடுஞ்சாலை பணிகளை தாமதமில்லாமல், விரைவாகவும், தரமாக முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்