மைல்கல்லை வழிபட்ட சாலைப்பணியாளர்கள்

வாய்மேடு அருகே ஆயுதபூஜைக்கு மைல்கல்லை வழிபட்ட சாலைப்பணியாளர்கள்

Update: 2023-10-24 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் நெடுஞ்சாலையில் தகட்டூரில் சாலைப்பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். நிகழ்ச்சியில் மைல்கல்லை குளிப்பாட்டி மஞ்சள்பொடி, திரவியப்பொடி, தேன், சந்தனம், பால், இளநீர், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் மைல்கல்லுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, மாலை அணிவித்து வாழை மரம் கட்டி தங்கள் பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களை வைத்து தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், உட்கோட்ட செயலாளர் வேம்பையன், மாவட்ட துணைத்தலைவர் சதாசிவம், வட்ட பொருளாளர் வேதரத்தினம் உள்ளிட்ட சாலை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்