சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-19 19:00 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையா, துரைப்பாண்டி, இ.கருப்பையா, மாவட்ட துணை நிர்வாகி முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் பார்த்தசாரதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனே நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பொங்கல் போனசாக சாலை பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்