வேதாரண்யத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்- நகரசபை தலைவர்
வேதாரண்யத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என நகரசபை தலைவர் புகழேந்தி கூறினார்.;
வேதாரண்யத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என நகரசபை தலைவர் புகழேந்தி கூறினார்.
நகரசபை கூட்டம்
வேதாரண்யத்தில் நகரசபை கூட்டம் நகராட்சி அவை கூடத்தில் நடந்தது. கூடடத்துக்கு நகரசபை மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, என்ஜினீயர் முகமது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் சசிகலா திர்மானங்களை படித்தார்.
இதில் உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு சாலை வசதி குறித்து பேசினர். பின்னர் நகரசபை தலைவர் புகேழ்ந்தி பேசியதாவது:-
சாலை மேம்பாட்டு பணிகள்
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வார்டுகளில் தார்ச்சாலைகளை பழுது நீர்க்கும் பணி நடந்து வருகிறது.
மண் சாலைகளை தார்ச்சாலையாக தரம் உயர்த்தும் பணியும் நடந்து வருகிறது. சாலை மேம்பாட்டு பணிகள் இன்னும் 3 மாதங்களுக்குள் நிறைவடையும். 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.4 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் முதல் குமரன்காடு பிள்ளையார்கோவில் வரை குடிநீர் குழாய் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடிநீர்
மேலும் நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் அடி பம்புகள் சீர் செய்யப்படும். கொள்ளித்தீவு, அகஸ்தியம்பள்ளி, கைலவனம் பேட்டை ஆகிய பகுதிகளில் புதிய மின்மோட்டார் அமைத்து குடிநீர் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். முடிவில் இளநிலை உதவியாளர் வீரபத்திரன் நன்றி கூறினார்.