ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ.7 லட்சத்தில் சாலைப்பணி;பிரின்ஸ் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான சாலைப்பணியை பிரின்ஸ் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்;

Update: 2022-07-25 18:40 GMT

குளச்சல், 

ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான சாலைப்பணியை பிரின்ஸ் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

சாலை பணி

குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 லட்சத்தில் ரீத்தாபுரம் பேரூராட்சி 13-வது வார்டு சரல்விளை அரசு தொடக்கப்பள்ளியில் சிறு மின்விசை திட்ட குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

அதை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் சோமன், பேரூர் காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் ராஜேஷ், செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ரூ.4 லட்சத்தில் பாறைக்கடை செல்லும் சாலை பணியையும், ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் யூதா காலனி செல்லும் சாலை பணியையும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்