கொண்டலாம்பட்டி மண்டலத்தில்ரூ.2¼ கோடியில் தார் சாலை பணிமேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு

Update: 2023-08-04 20:26 GMT

சேலம் 

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம், 46-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டி தெரு, அம்பலவாணன் சாமி கோவில் தெரு, நரசிங்கபுரம் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.40 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 55-வது வார்டு அம்பாள் ஏரி ரோடு, சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.36 லட்சத்தில் தார் சாலை உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று 51-வது வார்டு மணியனூர் பகுதியில் கல்வி நிதியின் கீழ் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மழலையர் பள்ளி கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மண்டல குழுத்தலைவர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் ரவி மற்றும் கவுன்சிலர்கள் மோகனபிரியா, தனலட்சுமி, கோபால், வரதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்