சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-23 20:14 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர்கள் எ.வ. வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், நகரசபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சாலை பாதுகாப்பு ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தி விபத்துகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் விபத்துகளை குறைக்கலாம். மாவட்டத்தில் அனைத்து நகரங்களுக்கும் புறவழிச்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரையிலும் 1,348 விபத்துக்கள் நடந்துள்ளன. இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகமாக நடந்துள்ளது. எனவே இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு உரிமம் வழங்கும் போது மண்டல அதிகாரிகள் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தும், பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அழகுசுந்தரம், முகமது எகியா உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் கட்டிடப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்