சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்

சங்கர்நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது;

Update: 2022-11-21 21:08 GMT

தமிழ்நாடு அரசு நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம், சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தியது. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நசீர் அகமது, கல்லூரி மேலாளர் சித்திரைவேல் ஆகியோர் பயிலரங்கத்தை தொடங்கி வைத்தனர். சங்கர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி-வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நவிலன், செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்