சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கே.வி.குப்பத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-01 17:26 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரோகிணி லட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மீனாட்சி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். முடிவில் ஆசிரியர் ஜாய்ஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்