சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நன்னாடு அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.;

Update: 2023-07-06 18:45 GMT

விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் நன்னாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோட்டப்பொறியாளர் சிவசேனா தலைமை தாங்கினார். சாலை பாதுகாப்பு கோட்டப்பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்டப்பொறியாளர் தனராஜன், உதவிப்பொறியாளர்கள் வசந்தபிரியா, சுவேதா மற்றும் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், தோகைப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இம்முகாமில் மாணவ- மாணவிகளுக்கு, சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு விளக்க காட்சிகள் காண்பிக்கப்பட்டன. மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்