சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் மங்கலத்தை அடுத்த பள்ளிபாளையத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று ஓட்டல் முன்பு உள்ள மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது ஓட்டல் நடத்தி வந்தவரிடம் மது விற்பனை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதையும், அவர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறித்தும் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.