ரூ.32 லட்சத்தில் சாலை சீரமைப்பு
திருக்கோவிலூர் அருகே ரூ.32 லட்சத்தில் சாலை சீரமைக்கப்பட்டது.;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோாிக்கை விடுத்தனர். அதன் பேரில் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் இருந்து ஐந்து முனை சந்திப்பு வரை இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க நகராட்சியின் பொது நிதியில் இருந்து ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து, முடிந்தது. இதற்கிடையே சீரமைக்கப்பட்ட சாலையை திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா, நகராட்சி ஆணையாளர் கீதா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.