சாலையில் கீறல்கள்; விபத்து ஏற்படும் அபாயம்
சாலையில் கீறல்கள்; விபத்து ஏற்படும் அபாயம்;
பல்லடம்
பல்லடம் பனப்பாளையத்தில் இருந்து பெத்தாம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இதன் வழியாக பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், உகாயனுர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லலாம். கடந்த மாதத்தில் ரோட்டில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு கீறல் போடப்பட்டது. புதிய ரோடு போடுவதற்காக கீறல் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது " விரைவில் ரோடு போடப்படும் என ரோட்டில் கீறல் போடப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் ரோடு போடும் பணிகள் தொடங்கவில்லை.. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே ரோட்டை விரைவாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்த பணியாளர்கள் பொங்கல் விடுமுறைக்கு சென்றதால் ரோடு போடும் பணிகள் தாமதமானதாகவும், விரைவில் பணி தொடங்கும் என தெரிவித்தனர்.
-------