திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்

திருத்தணியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.;

Update: 2022-08-21 12:28 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெரு பகுதியில் குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டும்போது குழாய் உடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருத்தணி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது சீரான குடிநீர் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்