சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன் வியாபாரிகள் சாலை மறியல்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.;
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் மீன் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு சாலையோர மீன் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.