பா.ம.க.வினர் சாலை மறியல்

நெய்வேலியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நிலக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-28 20:00 GMT

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நிலக்கோட்டை நால் ரோட்டில் அக்கட்சியின் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட விஜயகுமார் உள்பட 12 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல் செம்பட்டியில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் கிழக்கு ஒன்றிய பா.ம.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பா.ம.க.வினர் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் செம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இரவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்