பா.ம.க.வினர் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2023-07-28 18:38 GMT

காட்டுமன்னார்கோவில்

நெய்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து காட்டுமன்னார்கோவில் பஸ்நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் தலைமையில் பா.ம.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ம.க. நிர்வாகிகள் ராஜேஷ், கலைக்குமார், சத்தியமூர்த்தி, பாஸ்கர், உள்பட 7 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்