அ.தி.மு.க.வினர் சாலை மறியல்

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2022-10-19 18:45 GMT

சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் செந்தமிழன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக், மாவட்ட பேரவை செயலாளர் மணக்குடி சங்கர், முன்னாள் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கடையூர்

செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் மாவட்ட செயலாளரும், முன்னாள்எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ஜனார்த்தனம் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி

இதேபோல சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட மகளிர் அணி செயலாளருமான சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்