சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை
பரமக்குடி நகராட்சியில் 13-வது வார்டு பகுதியில் சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. கவுன்சிலர் அப்துல்மாலிக் உறுதி அளித்தார்.;
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சியில் 13-வது வார்டு பகுதியில் சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. கவுன்சிலர் அப்துல்மாலிக் உறுதி அளித்தார்.
13-வது வார்டு
பரமக்குடி நகராட்சியில் 13-வது வார்டு தி.மு.க. நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் கே.அப்துல் மாலிக். இவர் ஏற்கனவே 3-வது வார்டு, 13-வது வார்டு, 14-வது வார்டு ஆகியவற்றில் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். 2001 முதல் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி முகம் கண்டு வருகிறார். அதற்கு காரணம் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டுகளில் அப்பகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி வருவது தான்.
தற்போது அவர் வெற்றி பெற்றுள்ள 13-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-
குடிநீர் தொட்டி
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களின் சாலை, குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதன்படி சின்னக்கடை தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வாருகால் அமைக்கப்பட்டுள்ளது. கோவிந்த வல்லவ பந்த் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி விரைவில் அமைக்கப்பட உள்ளது. 15-வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ராமலிங்க அடிகளார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் புட்டாராமசாமி தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சின்ன கடை தெருவில் புதிதாக ரேஷன் கடை அமைக்கப்பட உள்ளது.
நகராட்சி பொது நிதியில் இருந்து கொடிக்கால் காரதெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோவிந்த வல்லப பந்த் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்ட உள்ளது. இது தவிர மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அனைத்தையும் நிறைவேற்றுவது தான் எனது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.