நெற்குவியலில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி
திருவையாறு அருகே நெற்குவியலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.;
திருவையாறு;
திருவையாறு அருகே நெற்குவியலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் புது மாப்பிள்ளை உயிரிழந்தார்.
விபத்து
திருவையாறு அருகே உள்ள கீழப்புனவாசலை சேர்ந்த ஜெயபால் மகன் ஜான்சைமன்(வயது35). இவர் தனியார் சிமெண்டு ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கேத்திரின் கிரிஜா(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் ஜான் சைமன் தனது வேலை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திருவையாறில் இருந்து அரியலூர் சாலை வழியாக புனவாசலுக்கு சென்றுகொண்டு இருந்தார். புனவாசல் பிரிவு சாலை அருகே வந்த போது சாலையில் காய வைத்திருந்த நெற்குவியல் மீது மோட்டார் சைக்கிள் மோதி அவர் கீழே விழுந்தார்.
பரிதாப சாவு
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜான்சைமன் இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 2 மாதங்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கீழப்புனவாசல் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.