குண்டும், குழியுமான ஜீவாநகர் சாலை வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி

உடுமலையை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயல் லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஜீவா நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2022-12-06 17:59 GMT

உடுமலையை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயல் லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஜீவா நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜீவா நகர் சாலை

உடுமலை அடுத்துள்ளது ராயல் லட்சுமி நகர். கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் உள்ள ஜீவாநகர் சாலை வழியாக கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். அதேபோன்று கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் உடுமலை நகராட்சி பகுதிக்கு வருவதற்கு இந்த சாலையில் வந்து செல்கின்றனர்.

விவசாயிகள் சரக்கு வாகனங்களில் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இந்த சாலையில் கார், வேன், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த பகுதியில் ஜீவா நகரை அடுத்துள்ள பகுதியில் இருந்து ராயல்லட்சுமி நகர் பகுதியில் உள்ள பி.ஏ.பி.உடுமலை கால்வாய் பாலம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

வாகன ஓட்டுனர்கள் அவதி

ஆங்காங்கே குழிகளில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அந்த சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள பி.ஏ.பி.உடுமலை கால்வாயில் உள்ள படிக்கட்டுகள் பகுதியில் துணிகளை துவைப்பதற்கு, துணிகளை மூட்டையாக கட்டிக்கொண்டு நடந்து சென்று வருவார்கள்.

அவ்வாறு நடந்து சென்று வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதனால் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையை புதியதாக தார்ச்சாலை அமைத்து சீரமைப்பு பணிகளை, ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்