நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதையொட்டி சாலையோரத்தில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சிலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இந்தநிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றில் கொள்ள கால அவகாசம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.