ஆர்.கே. பேட்டையில் குட்கா கடத்திய வாலிபர் கைது
ஆர்.கே. பேட்டையில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டையில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணிப்பேட்டையில் இருந்து ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.. அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதற்குள் 15 கிலோ குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் ராணிப்பேட்டை அருகே மேலாவதம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 31) என்பது தெரிய வந்தது. பின்பு போலீசார் வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும், 15 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.