திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கற்களால் விபத்து அபாயம்

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கற்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-08-20 14:43 GMT

திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பிரிவு பகுதியில் சாலையோரம் பெரிய பள்ளங்கள் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதனால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க நான்கு வழிச்சாலையில், எச்சரிக்கை சைகையுடன் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். ஆனால் சாலையோரம் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இரவு நேரங்களில் சாலையோரம் உள்ள கற்கள் தெரியாததால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே அந்த கற்களை அகற்றுவதுடன், தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்