மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கிரிக்கெட்டில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
மாவட்ட அளவிலான ‘ஏ’ டிவிஷன் கிரிக்கெட்டில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது.;
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான 'ஏ' டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் லீக் போட்டியில் ஊட்டி கேலக்ஸி கிரிக்கெட் அணி மற்றும் ரைசிங் ஸ்டார் கிரிக்கெட் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ரைசிங் ஸ்டார் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது. அணியை சேர்ந்த தினேஷ்குமார் 38 ரன்களும், புனித் 33 ரன்களும், முகமது சபீக் 26 ரன்கள் எடுத்தனர். கேலக்ஸி அணியின் வீரர் யபேப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ஆடிய கேலக்ஸி அணியால் 24 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் ராஜ்குமார் 38 ரன்கள் எடுத்தார். சதீஷ் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ரைசிங் ஸ்டார் அணியின் பந்து வீச்சாளர் மோகன்ராஜ் 3 விக்ெகட்டுகளை வீழ்த்தினார்.