மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உயர்வு

.மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது.

Update: 2022-06-08 19:49 GMT

மேட்டூர்:

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்றுமுன்தினம் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 411 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரத்து 923 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் காலை 114.75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.30 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்