தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

ஆற்காட்டில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-10-10 19:03 GMT

ஆற்காடு

ஆற்காட்டில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு ஆற்காடு நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் கிருஷ்ணாராம், மேலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில் நகராட்சி அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்