தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

பனப்பாக்கம் பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-10-09 18:24 GMT

பனப்பாக்கம் பேரூராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி பஸ் நிலையம் வரை சென்றது. அப்போது தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் மோகனகிருஷ்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் அபிதா, சுகாதார மேற்பார்வையாளர் பிரவீன் குமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்