தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

கோத்தகிரியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.;

Update: 2023-10-07 19:45 GMT

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கோத்தகிரி வருவாய்த்துறை சார்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாசில்தார் கோமதி தொடங்கி வைத்தார். கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாசில்தார் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். வருவாய்த்துறை ஊழியர்கள், நில அளவைத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்