அரிசி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஆம்பூர் அருகே அரிசி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 61), அரிசி வியாபாரி. இவரது மனைவி சரஸ்வதி (50). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த மோகன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் மோகனின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.