புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:
புரட்சி பாரதம் கட்சியின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் அடங்கிய அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில செயலாளர் பரணிமாரி, மாநில இளைஞரணி துணை பொதுச்செயலாளர் வலசை தர்மன், மாநில செயலாளர் கூவத்தூர் சகாதேவன், வக்கீல் பிரிவு துணைத்தலைவர் ஜான்சன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் கலந்துகொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கி புதிய பொறுப்பாளர்களுக்கு விருப்ப மனு வழங்கினர்.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்களை செயல்பட விடாமல் தாக்குதல் நடத்தி வருபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன், திருநாவுக்கரசு, பூவையாறு திலகர்பாபு, கோபிநாதன், ஏழுமலை, அய்யனார், திண்டிவனம் வேங்கடபதி, கஜேந்திரன், இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.