வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
புதுப்பாளையம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்;
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து அவர், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து கட்டி முடிக்கவும், கட்ட இயலாத பயனாளிகளை கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் கட்டி முடிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ராமகிருஷ்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சி) சரண்யாதேவி, உதவி திட்ட அலுவலர் அருண், உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) இமயவரம்பன்,
உதவி திட்ட அலுவலர்கள் (உட்கட்டமைப்பு) நாகேஷ்குமார், மகாலட்சுமி, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், மரியதேவ் ஆனந்த், அரசு துறை அலுவலர்கள், 37 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.