பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.;
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். வட்டார கல்வி அதிகாரிகள் அசோகன், சாந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைப்படும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டன. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.