தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம்
தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி கல்வி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் சாட்சியாபுரம் சி.எம்.எஸ். நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் அரவிந்தன், திருப்பதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தலைமையாசிரியர்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் மொத்தம் 116 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.