வருவாய்த்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
கூடுதல் பணியிடங்களை வழங்கக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.;
ஊழியர் விரோத நடவடிக்கைகளை...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுாிந்தனர். அந்த கோரிக்கை அட்டையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என்று இடம் பெற்றிருந்தது.
இன்றும் கோரிக்கை அட்டை அணியவுள்ளனர்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் 60 பெண் அலுவலா்கள் உள்பட 140 வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியவுள்ளனர்.