வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வரும் மனோஜ் முனியன் என்பவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் தமிழரசன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். முடிவில் மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.