வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-20 18:45 GMT

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுத விஜயரங்கன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் சங்க மாநில தலைவர் குமார் முன்னிலை வைத்தார். மாநிலத் தலைவர் சிவக்குமார், சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைப்படி வருவாய் துறையை சிறப்பு துறையாக அறிவித்து மேம்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர், தட்டச்சர், முதுநிலை பட்டியல் குளறுபடிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வருவாய் நிர்வாக ஆணையர் சரி செய்ய வேண்டும். தேர்தல் பணியாற்றும் தற்காலிக கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்