வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பாரதிவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் குமரி அனந்தன், துணைத் தலைவர்கள் துரைராஜ், கதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ் முனியனை அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்தும், மனோஜ் முனியனின் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், பெண் அலுவலர்களை ஒருமையில் பேசி அவமதிக்கும், அரசு நிர்வாகத்தில் அத்துமீறி அடாவடியாக தலையிட்டு வரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.