ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-17 19:37 GMT

புதுக்கோட்டையில் திலகர் திடலில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். அகவிலைப்படி உயர்வை நிலுவையின்றி வழங்க வேண்டும். 70 வயதானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்தகுடி மக்களுக்கு சென்னையில் வழங்குவது போல பஸ் பயண கட்டணச்சலுகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்