கார் மோதி ஓய்வுபெற்ற தபால்காரர் பலி

கே.வி.குப்பம் அருகே கார் மோதி ஓய்வுபெற்ற தபால்காரர் பலியானார்.;

Update: 2023-07-09 16:59 GMT

கே.வி.குப்பம் தாலுகா பழைய கிருஷ்ணாபுரம் ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70), ஓய்வு பெற்ற தபால்காரர். அ.தி.மு.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் வீட்டில் இருந்து மொபட்டில் சென்னங்குப்பம் நோக்கி குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்