ஓய்வு பெற்ற போலீசார் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-04 21:11 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் பெறும் 70 வயது முதிர்ந்த காவல் துறையினருக்கு 5 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான நோய்களுக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பென்சிகர் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாரன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், வக்கீல் மரிய ஸ்டீபன், ஐவின், அகமது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலக பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்