ஓய்வு பெற்ற காவலர் நல சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற காவலர் நல சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-01-22 18:45 GMT

கரூரில் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் தமிழக அரசால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கும் மருத்துவபடியை ரூ.300-ஐ உயர்த்தி ரூ.ஆயிரமாக வழங்க வேண்டும், காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கேண்டீனில் மலிவு விலையில் மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்