ஓய்வு பெற்றோர் பள்ளி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

ஓய்வு பெற்றோர் பள்ளி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.;

Update: 2022-06-05 18:58 GMT

தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்றோர் பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் மே மாத ஓய்வு ஊதியம் வழங்காததை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த ஆட்சியில் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்தபடி பென்சன் தொகையை குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டில் ஓய்வூதியதாரர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் புதிய தலைவராக பன்னீர்செல்வமும், மாவட்ட செயலாளராக கருப்பையாவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்