ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளர்கள் அமைப்பு கூட்டம்
ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளர்கள் அமைப்பு கூட்டம் நடந்தது.
தொண்டி,
திருவாடானையில் ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளர் அமைப்பு கூட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாடானை சி.கே.மங்கலம் நித்திய கல்யாணி பஞ்சாலையில் சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.700 முதல் ரூ.1000 வரை மட்டுமே மாத ஓய்வூதியம், எனவே ஓய்வு பெற்ற பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பாஞ்சாலை தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாபு, துணை தலைவர் ராமையா, மாவட்ட செயலாளர் வெங்கடசுப்பிரமணி உள்பட 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.