சாலை விபத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி சாவு

சாலை விபத்தில் ஓய்வுபெற்ற அதிகாரி உயிரிழந்தார்;

Update: 2022-09-13 20:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மட்டங்கால் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது 70). இவர், சென்னையில் உள்ள கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இவர் தஞ்சையை அடுத்த திட்டை அருகே ராமாபுரத்தில் தனக்கு சொந்தமான வயலுக்கு சென்றுவிட்டு திரும்ப பஸ் ஏறுவதற்காக திட்டை பிரிவு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் கொத்தங்குடியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பழனியாண்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்